முத்திரையிடாமல் எடைகற்கள் அளவைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
ஆனைமலை, வால்பாறையில் முத்திரையிடாமல் எடைகற்கள், அளவைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை என்று வியாபாரிகளுக்கு அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பொள்ளாச்சி
ஆனைமலை, வால்பாறையில் முத்திரையிடாமல் எடைகற்கள், அளவைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை என்று வியாபாரிகளுக்கு அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
முத்திரை பணி முகாம்
ஆனைமலையில் 2022-ம் ஆண்டு அ மற்றும் ஆ காலாண்டுகளுக்கான முத்திரை பணி முகாம் தொடங்கி, வருகிற 23-ந்தேதி வரையும், அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. இதேபோன்று வால்பாறையில் வருகிற 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும், அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையும் முகாம் நடக்கிறது.
முகாமில் ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிற்துறையினர் தங்களது எடைகள் மற்றும் அளவைகளை நேரில் கொண்டு வந்து முத்திரையிட்டு கொள்ள வேண்டும்.
ரூ.5 ஆயிரம் அபராதம்
மேலும் முத்திரையிடாமல் எடைகற்கள் மற்றும் அளவைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும். மேற்படி அபராத நடவடிக்கையினை தவிர்க்கும் பொருட்டு வியாபாரிகள் இந்த முகாமை பயன்படுத்தி முத்திரையிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவல் பொள்ளாச்சி முத்திரை ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
----
Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI
Related Tags :
Next Story