ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் உதவியாளரை மிரட்டிய தரகர் கைது
ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் உதவியாளரை மிரட்டிய தரகர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 38). இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக செயல் பட்டு வந்தார். இநதநிலையில் நேற்று மனோகரன் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்து அங்கு வட்டார போக்குவரத்து அலுவலரின் உதவியாளர் அருள்மொழியை தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை செய்து தரகர் மனோகரனை கைது செய்தார்.
Related Tags :
Next Story