டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும்


டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 March 2022 6:46 PM IST (Updated: 17 March 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சியில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் மாநில செய்தி தொடர்பாளர் மயில்சாமி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், நகர தலைவர் கோபால்சாமி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். மாநில தலைவர் சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொங்கு மண்டலம் முழுவதும் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.109.50 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து கிலோவுக்கு ரூ.82 முதல் ரூ.85 வரை வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை ஏன் மத்திய அரசு அனுமதிக்கிறது.

பொள்ளாச்சியில் 5-ந்தேதி ஆர்ப்பாட்டம்

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் சரியாக செயல்படாததால் விவசாயிகள் தனியாரிடம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் குறைந்த விலைக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும். தற்போது தென்னை மரங்களில் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை வேளாண்மை துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
எனவே வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நோய்களை கண்டறிந்து உரிய ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். நோய் தாக்குதல் ஏற்படும் மரத்திற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் உயர் ரக தென்னங்கன்றும் வழங்க வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள் இறக்கி சந்தைப்படுத்த அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சியில் அடுத்த மாதம் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story