திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள்


திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள்
x
தினத்தந்தி 17 March 2022 7:10 PM IST (Updated: 17 March 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், தற்போது வெளியிடப்பட்டுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணி காலியிடங்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து பிரத்தியோகமாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் திருநங்கைகள் மற்றும் பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் குரூப் 2 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேற்காணும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை தொலைபேசி எண்ணுடன் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

https://forms.gle/59rVRfjoy8RX8aQ16 என்ற இணைய வழி வாயிலாகவும், 1800599687626 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 20-ந் தேதி ஆகும். இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை வருகிற 21-ந் தேதி முதல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட இணையதளம் tiruvalur.nic.in மின்னஞ்சல் முகவரி trltnpscgroup2@gmail.com என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story