“வண்டலூர் உயிரியல் பூங்கா விரைவில் சீரமைக்கப்படும்” - அமைச்சர் ராமச்சந்திரன்
வண்டலூர் உயிரியல் பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதியளித்தார்.
சென்னை,
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவர்களில் பெரும்பாலான பகுதிகள் உடைந்து காணப்படுவதாகவும், இரும்பு வேலிகள் துருப்பிடித்துள்ளதாகவும், இதனால் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வண்டலூர் உயிரியல் பூங்காவின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்படும் என்று அவர் கூறினார். மேலும் வண்டலூர் உயிரியல் பூங்கா விரைவில் சீரமைக்கப்பட்டு மக்கள் அதிகம் வரக்கூடிய பகுதியாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Related Tags :
Next Story