தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சாலையில் கொட்டப்படும் கழிவுகள்
கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் நுழைவு வாயில் அருகே மார்க்கெட் உள்ளது. இங்குள்ள கடைகளில் உள்ள அழுகிய காய்கறிகள் பிளாஸ்டிக் பைகளில் நிரப்பப்பட்டு லாரியில் கொண்டு செல்ல சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த காய்கறிகளை அங்கு சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் உண்பதுடன், அவற்றை சாலையில் போட்டுவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி யடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலை யோரத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
ராம்குமார், கோத்தகிரி.
பழுதான பஸ்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ் கள் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பஸ்கள் அடிக்கடி வழியில் நிற்பதால் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இந்த பஸ்கள் வனப்பகுதி வழியாக செல்லும்போது பாதி வழியில் நிற்பதால் பயத்துடன் பயணிகள் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான பஸ்களை சரிசெய்து தரமான பஸ்களை இயக்க வேண்டும்.
ஜெகதீசுவரன், கூடலூர்.
குடிநீர் எந்திரம் பழுது
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இங்கு நோயாளிகளின் வசதிக்காக 3 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (சுடுதண்ணீர்) எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் பழுதடைந்து உள்ளதால், நோயாளிகள் சுடுதண்ணீருக்காக கடைகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்குள்ள குடிநீர் எந்திரத்தை சரிசெய்ய வேண்டும்.
ராஜா, கோத்தகிரி.
கழிவுகள் தேங்கும் குட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்பிரிவில் இருந்து செஞ்சேரிமலை செல்லும் வழியில் உள்ள குட்டையில் பிளாஸ்டிக்கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழிக்கோழிகள் மற்றும் பல்வேறு வகையான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குட்டையில் உள்ள தண்ணீர் மாசு ஏற்பட்டு உள்ளதுடன், அதிகளவில் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் இந்த தண்ணீரை கால்நடைகள் கூட குடிப்பது இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு கொட்டப்பட்டு உள்ள கழிவுகளை அகற்றுவதுடன், இதுபோன்ற கழிவுகளை இங்கு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாரதி, சுல்தான்பேட்டை.
குண்டும் குழியுமான சாலை
கோவை கணபதி மணியகாரம்பாளையத்தில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி யளிக்கிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், பெரும்பாலான வாகனங்கள் இந்த வழியாகதான் சென்று வருகின்றன. ஆனால் இந்த பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சூர்யகுமார், உடையாம்பாளையம்.
பஸ்களை நீட்டிக்க வேண்டும்
சூலூர் அரசு போக்குவரத்து கிளை சார்பில் காந்திபுரத்தில் இருந்து குமாரபாளையம் வரை செல்லும் 41 டி, காந்திபுரம் கோப்பக்காடுப்புதூர் செல்லும் 19ஜெ ஆகிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த 2 பஸ்களையும் சோமனூர் வரை இயக்கினால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரேஷ், சூலூர்.
தண்ணீர் வருவது இல்லை
கோவை மாநகராட்சி 72-வது வார்டுக்கு உட்பட்ட சுக்கரவார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். இங்கு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உப்புத்தண்ணீரும் இங்கு வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்வதுடன், உப்புத்தண்ணீரும் வினியோகிப்பதுடன், அதை பிடிக்க தெருவில் குழாய்கள் வைக்க வேண்டும்.
ஆனந்தி, சுக்ரவார்பேட்டை.
மின்ஒயரால் ஆபத்து
கோவை வீரகேரளம் பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களின் கீழ்ப்பகுதியில் ஒயர்கள் வெளியே தெரிந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் ெதரியாமல் இந்த ஒயர்கள் மீது கை வைத்தால் அவ்வளவுதான். கண்டிப்பாக மின்சாரம் தாக்கும். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து வெளியே நீ்ட்டிக் கொண்டு இருக்கும் ஒயர்களை சீரமைக்க வேண்டும்.
சோமசுந்தரம், வீரகேரளம்.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை சத்தி ரோட்டில் கணேசபுரம் முதல் விசுவாசபுரம் வரை மின்விளக்குகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் பல விளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.
பூபதி, வெள்ளமடை.
குப்பைக்கு தீ வைப்பதால் அவதி
கோவை குறிச்சி பேஸ்-2 பகுதியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளில் சிலர் தீ வைத்து விடுகிறார்கள். இதனால் அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டு வருவதால், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
ராமச்சந்திரன், குறிச்சி.
Related Tags :
Next Story