முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
கோவையில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளைவெள்ளிக்கிழமை) நடக்கிறது.
வடவள்ளி
கோவையில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளைவெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பங்குனி உத்திர திருவிழா
முருகனின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு பக்தர்கள் கொண்டு வரும் பால்குடம் மற்றும் தீர்த்த குடங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். மதியம் 12 மணியளவில் மீண்டும் பக்தர்கள் கொண்டு வரும் பால் குடங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் தங்க கவசத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இதையடுத்து வள்ளி-தெய்வானை சமேதராக முருகன் வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை சுற்றி வீதி உலா வருகிறார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
திருக்கல்யாணம்
இதேபோன்று காரமடை அருகே குருந்தமலையில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தியுடன் தொடங்கியது. பின்னர் நேற்று கொடியேற்றம், இன்று காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு குழந்தைவேலாயுதசுவாமி திருத்தேரில் எழுந்தருளுகிறார்.
காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இரவு பரிவேட்டை, தெப்போற்சவம், சந்தன காப்புடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குருந்தமலை கோவில் செயல் அலுவலர்(பொறுப்பு) லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இது தவிர கோவையில் உள்ள பிற முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.
Related Tags :
Next Story