நந்தி ஆற்று நீராழி மண்டபத்தில் எழுந்தருளிய முருக பெருமான்


நந்தி ஆற்று நீராழி மண்டபத்தில் எழுந்தருளிய முருக பெருமான்
x
தினத்தந்தி 18 March 2022 6:27 PM IST (Updated: 18 March 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

நந்தி ஆற்று நீராழி மண்டபத்தில் எழுந்தருளிய முருக பெருமான் கோவிலில் ஆற்று திருவிழா நேற்று நடந்தது.

திருத்தணி முருகன் கோவிலில் ஆற்று திருவிழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக வந்து மாட்டு வண்டியில் மேல்திருத்தணி, பொதட்டூர்பேட்டை ரோடு, தெக்களூர் பகுதியில் உள்ள நந்தி ஆற்றங்கரை கோவில் தோட்டத்து மண்டபத்தில் மதியம் 2.30 மணிக்கு எழுந்தருளினார். அதன்பிறகு, உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து, நந்தி ஆற்றில் நீராழி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், இரவு 7:30 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கோவிலை வந்தடைந்தார்.

இந்த ஆற்று திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினர் செய்திருந்தனர்.


Next Story