பேஸ்புக் மூலம் பழகி பெண்ணிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். மகளின் திருமணத்திற்கு பணம் தருவதாக கூறி அவர் நாடகமாடியது அம்பலமானது
பேஸ்புக் மூலம் பழகி பெண்ணிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். மகளின் திருமணத்திற்கு பணம் தருவதாக கூறி அவர் நாடகமாடியது அம்பலமானது
துடியலூர்
பேஸ்புக் மூலம் பழகி பெண்ணிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். மகளின் திருமணத்திற்கு பணம் தருவதாக கூறி அவர் நாடகமாடியது அம்பலமானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
முகநூல் நட்பு
கோவையை அடுத்த துடியலூர் தொப்பம்பட்டியை சேர்ந்த 43 வயது பெண்ணின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் அவர் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வரு கிறார். அந்த பெண்ணுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த மீன் வியாபாரி ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அது நட்பாக மாறியது. ஐயப்பன் திருமணமாகி மனைவி யை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதனால் அவர்கள் 2 பேரும் முகநூலில் தங்களின் கருத்துகளை பேசி வந்தனர். மேலும் தங்களின் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
மகள் திருமணம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐயப்பனை, அந்த பெண் செல்போனில் தொடர்பு கொண்டு தனது மகளுக்கு திருமணம் நடத்த உள்ளேன். அதற்கு ரூ.5 லட்சம் கடன் வேண்டும் என்று கேட் டார்.
உடனே அவர், உங்களை வீட்டில் சந்தித்து மகளின் திருமணத்துக்கு பணம் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி அந்த பெண் சம்மதித்து உள்ளார்.
அதன்படி கடந்த 16-ந் தேதி ஐயப்பன் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.
அவரிடம், அந்த பெண் பணம் கொண்டு வந்து உள்ளீர்களா என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர், தனது நண்பர் உக்கடத்தில் இருந்து இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து தந்துவிடுவார் என்று கூறி உள்ளார்.
நகை பறிப்பு
அப்போது அங்கு கிடந்த பூட்டை எடுத்து அந்த பெண்ணை திடீரென்று ஐயப்பன் தாக்கினார்.
இதில் அந்த பெண் நிலை தடுமாறினார். உடனே ஐயப்பன் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இது குறித்து அந்த பெண் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் உத்தர வின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சப்-இன்ஸ்பெக்டர்கள் அரவிந்த்ராஜன், திலக், ஷாஜகான் லூர்துராஜ், துரைராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள், நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அதில் ஐயப்பன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகி இருந்தது.
சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம், ஐயப்பனின் செல்போன் எண்ணை வாங்கி ஆய்வு செய்தனர்.
இதில் அவர், இடையர்பாளை யம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது.
உடனே போலீசார் விரைந்து சென்று ஐயப்பனை மடக்கி பிடித்தனர். அவர் நகை பறித்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து ஐயப்பனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் போலீசார் விசாரித்த போது, அந்த பெண் வசதியானவர் என்று கருதி நகை, பணத்தை கொள்ளையடிக்க வந்தேன். ஆனால் அந்த பெண் பணத்தை எங்கு வைத்து உள்ளார் என்று தெரிய வில்லை.
எனவே நகையை பறித்து விட்டு தப்பி ஓடி மது குடிக்க சென்றேன். அங்கிருந்து உக்கடம் சென்று ஊருக்கு தப்பி செல்ல திட்டமிட்டேன்.
ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்றார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story