பங்குனி உத்திரத்தையொட்டி பேரூர் கனகசபை மண்டபத்தில் ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர், சிவகாமியம்மன் காட்சி அளித்தனர். அதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்


பங்குனி உத்திரத்தையொட்டி பேரூர் கனகசபை மண்டபத்தில் ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர், சிவகாமியம்மன் காட்சி அளித்தனர். அதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
x
தினத்தந்தி 18 March 2022 8:13 PM IST (Updated: 18 March 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திரத்தையொட்டி பேரூர் கனகசபை மண்டபத்தில் ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர், சிவகாமியம்மன் காட்சி அளித்தனர். அதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்


பேரூர்

பங்குனி உத்திரத்தையொட்டி பேரூர் கனகசபை மண்டபத்தில் ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர், சிவகாமியம்மன் காட்சி அளித்தனர். அதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர விழா

கோவையை அடுத்த பேரூரில் பட்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்றது.

 அதன் இறுதி நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து காலை 4.30 மணிக்கு ஸ்ரீ நடராஜர், சிவகாமி அதி மூர்க்கம்மன், கோமுனி, பட்டிமுனி ஆகிய மூர்த்திகளுக்கு, 16 வகை யான திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்ச கலா ஸ்நபன கலச அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவீதி உலா

மேலும் தங்க கவச விசேஷ புஷ்பமாலைகள் அலங்காரத்துடன், 7.30 மணிக்கு அதிமூர்க்கம்மன், கோமுனி, பட்டிமுனி ஆகிய மூர்த்திக ளுக்கு ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோர் பங்குனி உத்திர ஆனந்த தாண்டவ தரிசன காட்சி அளித்தனர். 

காலை 9 மணியளவில் நடராஜர் வெள்ளி சப்பரத்திலும், சிவகாமி யம்மன் தங்க சப்பரத்தி லும் கொலு வீற்றிருந்து, 10 மணிக்கு மேல் கோவிலைச் சுற்றி திருவீதி உலா சென்றனர். 

அப்போது, கோவிலில் மேற்குத் திசையில் அதிமூர்க்கம்மன், நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவ காட்சியை தமக்கே உரித்தாக்குமாறு வேண்டும் நிகழ்ச்சி நடந்தது. 

அப்போது, சிவகாமி அம்மன் நடராஜப் பெருமானின் மேல் கோபம் கொண்டு, சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்கு வந்து நடை அடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

காட்சி அளித்தனர்

இதையடுத்து, சுந்தரமூர்த்தி நாயனார், இருவருக்கும் தூது சென்று சிவகாமி அம்பாளை சமாதானம் செய்து, நடராஜரிடம் இருந்து மாலையை சுந்தரமூர்த்திநாயனார் மூலம் சிவகாமி ஏற்றுக்கொள்கிறார். 

பின்னர், சிவகாமியம்மன் கோபம் தணிந்து கோவில் வந்து வரவேற்க, இருவரும், பேரூர் பட்டீசுவரர் கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் சமேதரராக எழுந்தருளி பக்தர்களுக்கு பங்குனி உத்திர தரிசனத்துக்கு காட்சி அளித்தனர். 

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

Next Story