சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 6 விழிப்பு ணர்வு வாகனங்களை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 6 விழிப்பு ணர்வு வாகனங்களை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கோவை
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 6 விழிப்பு ணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
அந்த வாகனங்களை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
நெல், கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம், கம்பு, ராகி, குதிரை வாலி, வரகு போன்ற சிறுதானியங்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.
2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்து சிறுதானியங்க ளின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பரிந்து ரைக்கப்பட்டு உள்ளன.
சிறுதானிய சாகுபடி மானாவாரி விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ளது. கோவை மாவட்டத்தில் இறவை மற்றும் மானாவாரியாக சோளம் பயிரிடப்படுகிறது.
சிறுதானிய பயிரின் பரப்பை அதிகரிக்க விதைகள், உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் மானிய விலையிலும், கை தெளிப்பான், பயிர் பாதுகாப்பு மற்றும் களைக்கொல்லி மருந்துகள் பின்னேற்பு மானியமாகவும், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கிலோவுக்கு ரூ.30 வழங்கப்படுகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தேசிய உணவு பாது காப்பு திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்க்கார்சாமக் குளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், அன்னூர் ஆகிய வட்டாரங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 6 பிரசார வாகனங்களில் தப்பாட்ட கலைஞர்கள் மூலம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story