சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் உள்ளதாக தொழில் அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்


சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் உள்ளதாக தொழில் அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்
x
தினத்தந்தி 18 March 2022 8:28 PM IST (Updated: 18 March 2022 8:28 PM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் உள்ளதாக தொழில் அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்

கோவை

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் உள்ளதாக தொழில் அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.

கொடிசியா

தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து கோவை தொழில்துறையினர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு

கொடிசியா தலைவர் வி.ரமேஷ்பாபு

தமிழக அரசின் நிதி பற்றாக்குறையை 4.15 சதவீதத்தில் இருந்து 3.08 சதவீதமாக குறைத்தது பாராட்டத்தக்கது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.911.50 கோடி ஒதுக்கீடு, தொழிற்துறைக்கு ரூ.3,267.91 கோடி ஒதுக்கீடு,

 ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில்  கோவை, பெரம்பலூர், வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கம், 

தமிழகத்தில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க ரூ.50 கோடி ஆதார நிதி ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க திட்டத்துக்கு கூடுதலாக ரூ.30 கோடி ஒதுக்கீடு.

இண்டஸ்ட்ரி 4.0 என்ற நவீன தொழில் யுகத்தை எதிர்கொள்ளும் வகையில் தொழிற்பயிற்சி பள்ளிகளை அமைக்க ரூ.2,400 கோடி ஒதுக்கீடு. தொழிற்சாலைகளின் பணியாளர் தேவையை ஈடுசெய்யும் வகையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்க சிறப்பு திட்டம்.

வரவேற்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூ.300 கோடி, தமிழ்நாடு கடன் உறுதி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு,

 அதிக அளவில் அந்நிய செலாவணியை ஏற்றுமதி யின் மூலம் கோவையில் அமைய உள்ள தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு கழகத்துக்கு முதல்கட்ட ஆதார நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்க ளுக்கு பயன் அளிக்கும் வகையில் அமைந்து உள்ள அறிவிப்புகளை கொடிசியா வரவேற்கிறது.

மேலும் உயர்ந்து வரும் மூலப்பொருள் விலை குறித்த தீர்வு, அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீத வட்டி மானியத்தை நீட்டித்தல், 

வங்கி கடனுக்கான பத்திர பதிவு கட்டணங்கள், ஒற்றைச்சாளர அனுமதி அறிமுகம், எலக்ட் ரானிக் பொருட்கள் உற்பத்திக்கென சிறப்பு பொருளாதார மண்டலம், புதிய உட்கட்டமைப்பு வசதிகளை 

கோவையில் உருவாக்க நிதி ஒதுக்கீடு இவற்றை மாநில அரசு கவனித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெரும் வகையில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

இந்திய தொழில் வர்த்தக சபை

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்பிரமணியன்

தமிழக பட்ஜெட்டை இந்திய தொழில் வர்த்தக சபை வரவேற்கிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு. 

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு கூடுதல் ஒதுக்கீடு மற்றும் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டம், மாநில நீர்வளத்துறைக்கு ரூ.7,338 கோடி ஒதுக்கீடு. இந்த நிதி ஆண்டில் புதிய 6 ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்களை தொடங்குதல்,

 தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்ய திறமையான தொழிலாளர்களை உருவாக்க தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல்,

 கோவையில் அமைக்கப்படும் தமிழ்நாடு தென்னை நார் வளர்ச்சி கழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மறு மலர்ச்சிக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரதேவன் தலைமையிலான குழுவின் அறிக்கையில் கொடுக்கப்பட்டு உள்ள பரிந்துரைகள் பட்ஜெட்டில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

சைமா

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் ரவிசாம்

இது முழுமையான மற்றும் வளர்ச்சி சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்ட பட்ஜெட். மாநிலத்தில் ஜவுளித்தொழில் மிகப்பெரிய தொழிலாக இருப்பதால் செயல்பாட்டின் அளவை ஊக்குவிக்கும். 

தொழில்துறை கொள்கையின் கீழ் நீட்டிக்கப்பட்ட பல்வேறு நன்மைகளால் பெரிதும் பயனடையும். புதிய தொழில் பூங்காக்கள் உருவாக்குவதன் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும். மாநிலத்தில் பருத்தி உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமா

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக்

இந்த நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

தமிழக அரசின் நிதி பற்றாக் குறை 3.80 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது சிறந்த நிதி மேலாண் மையை குறிக்கிறது. 

கோவை மாவட்டத்தில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் எங்களது பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது. தொழிற்துறை மேம்பாட்டிற்கு என பல அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளது. 

தமிழகத்தில் 2 எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.


Next Story