கல்லூரி பேராசிரியை வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக வேலைக்கார பெண்ணை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 43 பவுன் தங்கநகையை போலீசார் மீட்டனர்


கல்லூரி பேராசிரியை வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக வேலைக்கார பெண்ணை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 43 பவுன் தங்கநகையை போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 18 March 2022 9:34 PM IST (Updated: 18 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி பேராசிரியை வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக வேலைக்கார பெண்ணை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 43 பவுன் தங்கநகையை போலீசார் மீட்டனர்


கோவை

கல்லூரி பேராசிரியை வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக வேலைக்கார பெண்ணை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 43 பவுன் தங்கநகையை போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

நகை திருட்டு

கோவை ராமநாதபுரம் முத்துசாமி நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 36). இவர் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். 

இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் கடந்த ஜனவரி மாதம் 26 ந்தேதி சிவகங்கையில் நடந்த, ராஜசேகரின் தாயின் முதலாம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். 

அதன்பிறகு வீடு திரும்பிய அவர்கள் வழக்கமான பணிகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ந்தேதி குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தங்கநகைகளை அணிவதற்காக பீரோவை திறந்து நகையை தேடினார்கள். 

அப்போது 55 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகள் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வேலைக்கார பெண்

இந்த நிலையில் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வினிதா (23) என்பவரும் திடீரென வேலைக்கு வரவில்லை. 

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

இதையடுத்து நகை திருட்டுபோனது குறித்து ராமநாதபுரம் போலீசில் ராஜசேகர் புகார் செய்தார். 

வீட்டு வேலைக்கார பெண் வினிதா மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரபாதேவி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் பதுங்கி இருந்த வினிதாவை போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர் கல்லூரி பேராசிரியை வீட்டில் இருந்து நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.

 இதையடுத்து அவரிடம் இருந்து 43 பவுன் தங்கநகையை போலீசார் மீட்டனர். பின்னர் கைதான வினிதாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story