தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு


தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 March 2022 9:34 PM IST (Updated: 18 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செயலாளர் சந்தனாம்மாள், பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் கடந்த 4-ந் தேதி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்து கொண்டு இருந்தது. 5-வது வார்டு கவுன்சிலர் ராகிணியும், 2-வது வார்டு கவுன்சிலர் வனிதாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது கவுன்சிலர் ராகிணியின் தந்தையும், தி.மு.க. பேரூராட்சி செயலாளருமான ஆறுச்சாமி என்பவர் தேர்தல் நடந்த பேரூராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வாக்குசீட்டுகளை பறித்து கிழித்து சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்று விட்டார். 

எனவே பறித்து சென்ற வாக்குசீட்டுகளை பெற்று தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின்பேரில் அத்துமீறி நுழைதல், தேர்தல் விதிமுறை மீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆறுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story