பாம்பு கடித்து பெண் பலி


பாம்பு கடித்து பெண் பலி
x
தினத்தந்தி 19 March 2022 4:48 PM IST (Updated: 19 March 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரை அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக பலியானார்.

பூந்தமல்லி,  

குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜானகி(வயது 55). கட்டிடத்தொழிலாளி. இவர், நேற்று காலை வழக்கம்போல் கட்டிட வேலைக்கு சென்றார். கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தபோது அவரது காலில் பாம்பு கடித்து விட்டது. உடனடியாக அவரை சகதொழிலாளர்கள், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜானகி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்திரமேரூர் அடுத்த தளவராம் பூண்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ராமசாமி(40). இவர் அதே ஊரில் விவசாயத்திற்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். எலித் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் வயலைச் சுற்றி மின் வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அதிகாலை வயலுக்குச் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த உத்திரமேரூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
1 More update

Next Story