போலாம் ரைட் என்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் பஸ்சில் பயணம் செய்த கலெக்டர் சமீரன் மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டார்


போலாம் ரைட் என்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் பஸ்சில் பயணம் செய்த கலெக்டர் சமீரன் மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டார்
x
தினத்தந்தி 19 March 2022 7:42 PM IST (Updated: 19 March 2022 7:42 PM IST)
t-max-icont-min-icon

போலாம் ரைட் என்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் பஸ்சில் பயணம் செய்த கலெக்டர் சமீரன் மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டார்


கோவை

'போலாம் ரைட்' என்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுடன் பஸ்சில் பயணம் செய்த கலெக்டர் சமீரன், மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டார்.

‘போலாம் ரைட் நிகழ்ச்சி

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 'போலாம் ரைட். என்ற நிகழ்ச்சி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  நடைபெற்றது. 

இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் எஸ்.எஸ்.குளம், கெம்பநாயக்கன்பாளையம், காட் டம்பட்டி, சொக்கம்பாளையம், எஸ்.புங்கம்பாளையம் ஆகிய 6 அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் 50 பேர் பங்கேற்று கலெக்டர் சமீரனுடன் கலந்துரையாடினர்.

அப்போது, தனது பெயர், ஊர், படிப்பு உள்ளிட்ட சுய விவரங்களை மாணவ-மாணவிகளிடம் கலெக்டர் கூறினார். 

அது போல் மாணவ- மாணவிகளும் தங்களை கலெக்டரிடம் அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் தங்களின் உயர்கல்வி, அது தொடர்பான படிப்பு, என்ன வேலைக்கு செல்ல விரும்புகிறோம் என்பதை தெரிவித்தனர்.

 அவர்களிடம், நீங்கள் எந்த படிப்பு படிக்க விரும்பினாலும் முழு முயற்சியோடு படித்தால் வெற்றி பெற்று உங்கள் லட்சியத்தை அடைய லாம் என்று கலெக்டர் கூறினார். 

இதையடுத்து கலெக்டர் சமீரன், பள்ளி மாணவ- மாணவிகளுடன் பஸ்சில் அமர்ந்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் சென்றார். 

அங்கு மாணவ- மாணவிகள் கலெக்டர் சமீரனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

அங்குள்ள பூச்சியியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களுடன் சென்ற கலெக்டர் சமீரன், பூச்சிகள் குறித்து விளக்கி கூறினார்.

மாணவர்களுடன் மதிய உணவு

அவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட கலெக்டர், கோவை- அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்தார். 

அங்கு அவர், சின்னியம் பாளையம், அரசூர், வாகராயம்பாளையம், சூலூர், காங்கேயம்பாளையம், செஞ்சேரிமலையடி பாளையம், ஜெ.கிருஷ்ணாபுரம், பீடம்பள்ளி, 

இடையர்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 56 மாணவ- மாணவிகளுடன் ‘போலாம் ரைட்..' நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடினார். 

அப்போது மதிய உணவு நேரம் என்பதால் ஒரு மாணவி, எங்களோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடுவீர்களா? என்று கேள்வி கேட்டார். 

அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட கலெக்டர், மாணவ-மாணவிகளுக்காக தயார் செய்த தயிர் சாதம் மற்றும் தக்காளி சாதத்தை அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இதனால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோரிக்கைகள்

இதைத்தொடர்ந்து தங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம், தண்ணீர் வசதி, பஸ்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை கலெக்டரிடம் மாணவ -மாணவிகள் தெரிவித்தனர். 

பின்னர் அந்த மாணவ- மாணவிகள் அனைவரும் மண்டல அறிவியல் மையத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுடன் போலாம் ரைட். என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு உள்ளது.  

மாணவ-மாணவிகள் அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் கோவை மாவட்டத்தில் சிறப்பான அம்சங்கள் காண்பிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு சனிக்கிழமை யும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல், மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story