திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா
திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா
பொள்ளாச்சி
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் தொடங்கும்.
அதன்படி சிவராத்திரிக்கு மறுநாள் 2-ந்தேதி குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. கடந்த 8-நதேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
14-ந்தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. கடந்த 17-ந்தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருக்க தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து குண்டம் மைதானத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து குண்டத்தில் அம்மன் அருளாளி மல்லிகை பூவை உருட்டி விட்டார்.
அதை தொடர்ந்து 600-க்கும் மேற்பட்ட விரதம் இருந்த திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பினர். சிலர் பக்தர்கள் அலகு குத்தியப்படி குண்டம் இறங்கினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குண்டம் பூவை கையில் அள்ளி போட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
Related Tags :
Next Story