கட்டிட தொழிலாளி உள்பட 4 பேர் தற்கொலை


கட்டிட தொழிலாளி உள்பட 4 பேர் தற்கொலை
x
கட்டிட தொழிலாளி உள்பட 4 பேர் தற்கொலை
தினத்தந்தி 19 March 2022 8:34 PM IST (Updated: 19 March 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

கட்டிட தொழிலாளி உள்பட 4 பேர் தற்கொலை

பொள்ளாச்சி

பொள்ளாச்சி குமரன் நகர் பாலகிருஷ்ணா லே-அவுட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் மது குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் மனைவியுடன் அவர் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று விட்டத்தில் சேலையை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனைமலை அருகே உள்ள திவான்சாபுதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் பழனாள் (80). இவர் கடந்த சில நாட்களாக தொண்டை வலியினால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சிசிக்சை பெற்றும் வலி தீராததால் விரக்தி அடைந்தவர் சாணிபவுடர் (விஷம்) கரைத்து குடித்தார். இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். 

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (60). இவருக்கு நீண்டநாட்களாக குடிபழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் சாணிபவுடர் (விஷம்) கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த அய்யம்பாளையத்தில் ஒரு தனியார் மனநல காப்பகம் உள்ளது. இங்கு கோவை அருகே உள்ள கோவைப்புதூர் பிரிவை சேர்ந்த மனோகர் (39) என்பவர் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அவரை காணவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் மனநல காப்பகம் வளாகத்தில் உள்ள கிணற்றில் மோட்டார் போடுவதற்கு சென்ற போது, உள்ளே மனோகர் பிணமாக மிதந்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிணற்றில் குதித்து மனோகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Next Story