நகராட்சி கடைக்காரர்கள் சாலை மறியல்


நகராட்சி கடைக்காரர்கள் சாலை மறியல்
x
நகராட்சி கடைக்காரர்கள் சாலை மறியல்
தினத்தந்தி 19 March 2022 8:39 PM IST (Updated: 19 March 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி கடைக்காரர்கள் சாலை மறியல்

வால்பாறை

வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நகராட்சி மார்க்கெட் பகுதியில் 350 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு குறைந்த பட்சமாக ரூ.2ஆயிரத்து 100,அதிகபட்சமாக ரூ.14 ஆயிரம் வரை  வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நகராட்சி கடைக்காரர்கள் பலர் கடந்த 5 ஆண்டுகளாக கடைவாடகையை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் ரூ.5¼ கோடி வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்தும் கடைவாடகை செலுத்தாமல் இருந்து வந்ததால் நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

காலை 9 மணியளவில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமையில் பொறியாளர் வெங்கடாசலம், துப்புரவு அதிகாரி செல்வராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நகராட்சி கடைவாடகை பாக்கியுள்ள 16 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி கடைக்கார்கள், வட்டவியாபாரிகள் கூட்டமைப்பு, வணிகர் சங்கத்தினர் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பின்னர்வியாபார சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமாரிடம் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தி.மு.க. நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த வித விதமான முடிவும் எட்டப்படவில்லை. உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய கடைவாடகையை செலுத்தியே ஆகவேண்டும் என்று ஆணையாளர் கூறியதை தொடர்ந்து நகராட்சி கடைக்காரர்கள் புதிய நகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்த முடியாது, பழைய வாடகையை ஒரிரு நாட்களில் செலுத்துவதாக கூறி நகராட்சி கடைநடத்துபவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story