சூதாடிய 3 பேர் கைது
சூதாடிய 3 பேர் கைது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே ஆதித்யா கார்டன் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிணத்துகடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடியதாக குனியமுத்தூர், காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது37), சிக்கலாம் பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த அருண்குமார் (40), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள், ரூ. 450 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story