வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் நேரில் ஆய்வு


வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் நேரில் ஆய்வு
x
வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் நேரில் ஆய்வு
தினத்தந்தி 19 March 2022 9:04 PM IST (Updated: 19 March 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் நேரில் ஆய்வு

வால்பாறை

வால்பாறையில் உள்ள கக்கன்காலனி, துளசிங்நகர், காமராஜ் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய கக்கன்காலனி ஆற்றுத் தண்ணீரை தேக்கி வைத்து வால்பாறை படகு இல்லத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த தண்ணீர் குடியிருப்புகளின் சாக்கடை கழிவுநீருடன் கலந்து வருகிறது. 

 மேலும்வால்பாறை நகரில் உள்ள பலரும் இந்த படகு இல்லத்தில் குப்பை கழிவுகளை கொட்டி வருவதால் படகு இல்லத்தில் குப்பை கூளங்கள் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படகு இல்லத்தில் உள்ள இரும்பு பாலத்திலும் அங்குள்ள மரங்களிலும் காணப்படும் கொக்குகள், நீர் காகங்கள் சில ஆங்காங்கே தண்ணீரில் செத்து மிதந்தன.

இதனால் பறவை காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் கணேசன் உத்தரவின் பேரில் உதவி வனப் பாதுகாவலர் செல்வம் தலைமையில் வனச்சரகர் மணிகண்டன், வனவர்கள் மணிகண்டன், மாரிமுத்து, விலங்கியலாளர் அன்வர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகராட்சி படகு இல்லத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

இறந்து கிடந்த நான்கு கொக்குகளின் உடலை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் பயன்படுத்தாத நிலையில் இருக்கும் தண்ணீர் மாசு அடைந்து விட்டதா என்பதை கண்டறிவதற்கும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
----------------------------------------------------

Next Story