காங்கிரஸ், பா.ஜனதாவில் சேருவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை; முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா பேட்டி
காங்கிரஸ், பா.ஜனதாவில் சேருவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஜனதாதளம்(எஸ்) கட்சி சாா்பில் கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தேன். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 12 மாதங்கள் உயர்கல்வித்துறை மந்திரியாக இருந்திருந்தேன். நான் பா.ஜனதாவில் சேர இருப்பதாகவும், காங்கிரசில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. ஆனால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. பா.ஜனதா தலைவர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு, கட்சியில் சேர்ந்தால் எனக்கும், மகனுக்கும் சீட் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும், என்னை தொடர்பு கொண்டு எனக்கும், மகனுக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக கூறியுள்ளனர். சாமுண்டீஸ்வரி தொகுதியின் வளர்ச்சிக்காவும், எனது தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் தினமும் வேலை செய்து வருகிறேன்.
இவ்வாறு ஜி.டி.தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story