15 நாட்களில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது; சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை


15 நாட்களில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது; சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 March 2022 3:44 PM IST (Updated: 20 March 2022 3:44 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 15 நாட்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 8 பேரை குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 8 பேரை குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு இதுவரை 40 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த 40 பேர்களில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 27 பேரும், வழிப்பறி, திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 9 பேரும், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரும், பாலியல் தொழில் செய்த 2 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள்.


Next Story