சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நாளை நடக்கிறது


சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 20 March 2022 5:18 PM IST (Updated: 20 March 2022 5:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழாவை நாளை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைப்பார்கள்.

கலை பண்பாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து சென்னை தீவுத்திடலில் தமிழ் மண்ணின் கலைப் பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சங்கமமாக, ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற நிகழ்ச்சியை நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. விழாவை தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைப்பார்கள்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய கலை வடிவங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பண்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி இருக்கும். ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்துவது குறித்து அரசு பின்னர் அறிவிக்கும்.

மேற்கண்ட தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Next Story