விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்


விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 March 2022 6:26 PM IST (Updated: 20 March 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 25-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இக்கூட்டம் நடைபெறும் அன்றைய தினம், பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம், பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தமிழ்நாடு பண்ணை நிலங்களை பசுமையாக்கும் திட்டத்தில் இணைய வழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகள், ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் பரப்பளவு, பட்டா ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ இணையவழி சிறு, குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story