கொளப்பாக்கம் ஊராட்சியில் வீட்டு வரி செலுத்த சிறப்பு முகாம்


கொளப்பாக்கம் ஊராட்சியில் வீட்டு வரி செலுத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 20 March 2022 7:04 PM IST (Updated: 20 March 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

கொளப்பாக்கம் ஊராட்சியில் வீட்டு வரி சிரமமின்றி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வார நாட்களை தவிர மற்ற நாட்களில் வேலைக்கு சென்று விடுவதால் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை முறையாக செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவிப்புகள் வெளியிட்டும் ஏராளமானோர் வரிகளை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இதனால் ஊராட்சிக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை போக்கும் விதமாக கொளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளில் வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு ஒரு வார்டு என குடியிருப்பு வாசிகள் இருக்கும் பகுதிகளுக்கு வீட்டு வரிகளை செலுத்த முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அந்த வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் தங்களின் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை சிரமமின்றி செலுத்தி கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story