வாலாஜாபாத் அருகே ரூ.2 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


வாலாஜாபாத் அருகே ரூ.2 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 20 March 2022 7:18 PM IST (Updated: 20 March 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.

நிலம் ஆக்கிரமிப்பு

ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் தாலுக்கா சிட்டியம்பாக்கம் கிராமத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் குடும்பத்தினர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வந்தனர்.

நிலம் மீட்பு

இந்த ஆக்கிரமிப்பை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 முறை அறிவிப்பு வழங்கிய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளாட்சி பிரதிநிதி குடும்பத்தினர் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சீபுரம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சிட்டியபாக்கம் கிராமத்திற்கு சென்று ஓட்டல் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.2 கோடி மதிப்புடைய புறம்போக்கு நிலத்தை மீட்டனர். அந்த இடத்தில் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.


Next Story