லாரியை வாட்டர் வாஷ் செய்தபோது மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

கிணத்துக்கடவு அருகே லாரியை ‘வாட்டர் வாஷ்’ செய்தபோது மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே லாரியை ‘வாட்டர் வாஷ்’ செய்தபோது மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மின்சாரம் தாக்கியது
கோவை அருகே உள்ள ஒத்தக்கால்மண்டபம் வேலபூசாரி சந்து பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34) இவர் டிப்பர் லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி நளினி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. ராஜ்குமார் கடந்த 6 மாதங்களாக கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரி உள்ள ஒரு தனியார் கிரஷர் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு வேலைக்கு சென்றவர் தான் ஓட்டி வந்த டிப்பர் லாரியை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக கிரசரில் உள்ள மோட்டாரை ஆன் செய்துவிட்டு வாட்டர் சர்வீஸ் செய்ய குழாயை கையில் பிடிக்கும் போது திடீரென அதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது.
உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
இதனால் அவரை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைசாமி உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் கிரசர் உரிமையாளரான காரச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன், மேலாளர் சரண்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story