வால்பாறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை


வால்பாறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை
x

வால்பாறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வால்பாறை

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அமித் பண்ணா (வயது21). இவர் தனது மனைவி நிமாசக்சா மற்றும் 2½ வயது மகளுடன் வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் அமித்பண்ணா தனது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று விட்டு வந்துள்ளார். ஊருக்கு சென்று விட்டு வந்ததிலிருந்து மன உலைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தனது மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில் தனிமையில் இருந்த அமித்பண்ணா திடீெரன தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்ததும் சேக்கல்முடி போலீசார் அங்கு சென்று, அமித்பண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story