தென்னை மரத்தில் பூச்சி தாக்குதல் குறித்து மாணவர்கள் விளக்கம்

ஆத்துப்பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரத்தில் பூச்சி தாக்குதல் குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
பொள்ளாச்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் அடங்கிய குழுவினர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் தென்னை மரத்தில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈய் தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர், மஞ்சள் நிற ஒட்டும் பொறியை தென்னை மரத்தில் கட்டி அதன் செயல்முறை பலன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
சின்னப்பம்பாளையம் கிராமத்தில் பந்தல்முறையில் புடலை சாகுபடி செய்யும் விவசாயி ஒருவரின் வயலில் பழ ஈயை கட்டுப்படுத்தும் கருவாட்டு பொறி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.மேலும், பழ ஈயை கட்டுப்படுத்தும் மற்ற முறைகள் குறித்தும் மாணவர்கள் விளக்கினர். இதில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அறிந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






