தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
திறந்தவெளி பாரான நிழற்குடை
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கட்டப்பெட்டு இன்கோ தேயிலைத் தொழிற்சாலை அருகே பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மதுபிரியர்கள் இந்த நிழற்குடைக்குள் அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டுச் செல்கின்றனர். எனவே பயணிகள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், பேருந்து நிழற்குடைக்குள் மது அருந்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போஜன், கட்டபெட்டு, கோத்தகிரி.
போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி கமர்சியல் சாலையில் சுற்றுலா பஸ்கள், மேக்சி கேப் வாகனங்கள், மினி வேன்கள் செல்ல அனுமதி இல்லை. வார விடுமுறை நாளில் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வழி தெரியாமல் கமர்சியல் சாலை யில் அனுமதிக்கப்படாத வாகனங்களை இயக்குவதால். கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே போலீசார் நடவடிக்கை எடுத்து இது தொடர்பான அறிவிப்பு வைப்பதுடன், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
அன்வர், காந்தல், ஊட்டி.
நடைபாதையில் செல்லும் கழிவுநீர்
ஊட்டி கமர்சியல் சாலை கனரா வங்கி ஏ.டி.எம். முன்பு உள்ள நடை பாதையில் சாக்கடை கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு தொற்றுநோயும் ஏற்படும் அபாய நிலையும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நடைபாதையில் வழிந்தோறும் கழிவுநீரை சரிசெயய வேண்டும்.
பிரியா, கிரீன்பில்டு, ஊட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. பல நாட்களாக இந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கனிமொழி, பாப்பநாயக்கன்பாளையம்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
மேம்பாலத்தில் மணல் சுத்தம் செய்யப்பட்டது
கோவை அருகே உள்ள சோமனூர் மேம்பாலத்தில் இருபுறத்திலம் மணல் தேங்கி கிடந்தது. காற்று வீசும்போது அந்த மணல் புழுதி வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுந்ததால் பெரிதும் அவதியடைந்து வந்தனர். அத்துடன் விபத்துகளும் ஏற்பட்டது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தின் இருபுறத்திலும் தேங்கி கிடந்த மணலை சுத்தம் செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
தமிழ், சோமனூர்.
குண்டும் குழியுமான சாலை
பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் இந்த வழியாக வரும் வாகனங்கள் அங்குள்ள பெருமாள் கோவில் சாலை வழியாக சென்று வருகிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து பலமுறை புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ஜெகதீஷ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.
தெருநாய்கள் தொல்லை
கோவை காந்திமாநகர், ஆவாரம்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. சாலையில் கூட்டங்கூட்டமாக ஜாலியாக உலா வரும் தெருநாய்கள் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
பெருமாள்சாமி, ஆவாரம்பாளையம்.
கூடுதல் குப்பைதொட்டி வேண்டும்
பொள்ளாச்சி அருகே உள்ள சுற்றுலா மையமான ஆழியாறு பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பலர் உணவு கொண்டு வந்து இங்குள்ள பூங்கா வளாகத்தில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் அந்த கழிவுகளை போட போதிய அளவில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் கழிவு மற்றும் குப்பைகளை திறந்த வெளியில் தூக்கி வீசுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அந்த கழிவுகளை சாப்பிட வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளும் வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இங்கு கூடுதலாக குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
தவச்செல்வி, பொள்ளாச்சி.
ஏர்ஹாரனால் பயணிகள் அவதி
கோவை மாநகர எல்லைக்குள் பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் (ஏர்ஹாரன்) பொருத்தப்பட்டு உள்ளது. அதை ஒலிக்கும்போது சத்தம் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சில நேரத்தில் பின்னால் வரும் வாகனத்தில் இருந்து திடீரென்று ஏர்ஹாரன் ஒலிப்பதால் பயந்து வாகனங்களில் இருந்து கீழே விழக்கூடிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து ஏர்ஹாரன் பொருத்தி உள்ள வாகனங்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, கோவை.
Related Tags :
Next Story