திருத்தணி முருகன் கோவிலில் ரவிசங்கர் சாமி தரிசனம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்து சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து வருகை தந்த அவருக்கு மேள தாளங்களுடன் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருத்தணி மலைக்கோவிலுக்கு சென்ற அவரை கோவில் இணை ஆனையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி மற்றும் கோவில் நிர்வாகிகள் மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் வரவேற்று அழைத்துச்சென்றனர். கோவில் கொடி மரத்தை வணங்கி உள்ளே சென்ற ரவிசங்கர் முருகப்பெருமானை பயபக்தியுடன் வணங்கினார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும், திருத்தணி முருகப் பெருமான் புகைப்படம் வழங்கப்பட்டது.
அவரது வருகையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனித், துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, ரித்து, பாஸ்கர், இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்டோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் வந்திறங்கிய அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் வாழும் கலை அமைப்பின் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story