திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 20 March 2022 9:13 PM IST (Updated: 20 March 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணவாளநகர், திருப்பாச்சூர், பிரயாங்குப்பம் கடம்பத்தூர், அகரம், புதுமாவிலங்கை, சத்தரை, பேரம்பாக்கம், மப்பேடு, கூவம், குமாரச்சேரி, பண்ணூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும் அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதன் காரணமாக காலை 8 மணி வரை சாலை தெரியாத அளவிற்கு வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் காலை நேரத்தில் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து செல்வதையும் காணமுடிகிறது.


Next Story