வால்பாறையில் அணைகளில் தண்ணீர் குறைந்ததால் மின் உற்பத்தி நிறுத்தம்
வால்பாறையில் தொடர் வறட்சி காரணமாக அணைகளில் தண்ணீர் குறைந்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் தொடர் வறட்சி காரணமாக அணைகளில் தண்ணீர் குறைந்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
நீர்மட்டம் குறைந்தது
வால்பாறையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கோடை காலத்தை முன்னிட்டு கடுமையான வெயில் வாட்டி வருகிறது. அணைகளுக்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்தி தரும் அனைத்து ஆறுகளும் வறண்டு விட்டது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்து விட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி முதல் சோலையாறு மின் நிலையம்-1 மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
தற்போது தொடர் வறச்சியால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாகி விட்டதால் மின் நிலையம் இயங்குவதற்கு தேவைப்படும் தண்ணீர் மின் நிலையத்திற்கு திறந்து விடப்படுவதற்கான தண்ணீர் சோலையாறு அணையில் இல்லாததால் நேற்று முதல் சோலையார் மின் நிலையம்-1 இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
மின் உற்பத்தி நிறுத்தம்
இதனால் சோலையாறு மின் நிலையம்-1 மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 42 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்து விட்டதோடு பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதும் நிறுத்தப்பட்டு விட்டது.
இனி வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்து சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டபின்னர் தான் மின் உற்பத்தி செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story