தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 21 March 2022 8:59 PM IST (Updated: 21 March 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


பி.ஏ.பி.வாய்கால் சீரமைக்கப்படுமா?

சுல்தான்பேட்டை ஒன்றியம்பச்சாபாளையம் பகுதியில் பி.ஏ.பி. வாய்காலில் பல இடங்களில் உடைந்தும், பெயர்ந்தும் சேதம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும்போது, அதன் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சரியாக சென்று சேருவது இல்லை. இதனால் விவசாயிகள் அவதியடைந:து வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பி.ஏ.பி. வாய்க்காலில் உடைந்து சேதம் அடைந்த பகுதியில் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
ராஜதுரை, சுல்தான்பேட்டை.

வேகத்தடை வேண்டும்

  கோவையை அடுத்த செட்டிபாளையத்தில் இருந்து மேற்கே ஒக்கிலி பாளையம் பகுதியில் உள்ள சாலையில் எஸ் போன்ற வளைவு உள்ளது. இந்த வளைவில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபத்துகள் நடப்பதை தடுக்க இந்த சாலையில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.
  ஜமுனாராணி, ஒக்கிலிபாளையம்.

மூடப்பட்ட நூலகம்

  கோவை மாநகராட்சி 76-வது வார்டு நேரு காலனியில் கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பு நூலகம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. பின்னர் அது உடனடியாக மூடப்பட்டது. ஆனால் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால் அங்கு இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. அதுபோன்று நூலகமும் பூட்டியே இருப்பதால் உபயோகமும் இல்லை. எனவே இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் வகையில் உடனடியாக நூலத்தை திறக்க வேண்டும்.
  பாலாஜி மோகன்ராஜ், கோவை.

விபத்தை ஏற்படுத்தும் குழி 

  கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டியை தாண்டி விசுவாசபுரம் உள்ளது. இங்கு சாலையின் ஓரத்தில் குழாய்களை பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழிக்குள் குழாய் போடப்பட்டது. ஆனால் இதுவரை குழி மூடப்படவில்லை. இந்த குழி சாலை ஓரத்தில் இருப்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அத்துடன் இங்கு பள்ளி இருப்பதால் அந்த வழியாக மாணவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. அவர்கள் சாலையில் நடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த குழிகளை உடனடியாக மூட வேண்டும்.
  குருமூர்த்தி, விசுவாசபுரம்.

தெருநாய்கள் தொல்லை

  கோவை மாநகராட்சி 49-வது வார்டு பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள என்.ஜி.ராமசாமி ரோடு பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக சாலையில் உலா வரும் இந்த தெருநாய்கள், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகிறது. அதுபோன்று நடந்து செல்பவர்களையும் அவை விடுவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  கோபாலகிருஷ்ணன், பாப்பநாயக்கன்பாளையம்.

துர்நாற்றம் வீசும் சிறுநீர் கழிப்பிடம்

  கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய பஸ் நிலையத்தில் சேலம், திருப்பூர், ஆனைக்கட்டி, தாராபுரம் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக இலவச சிறுநீர் கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிப்பிடம் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
  ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.

ஆபத்தான மின்கம்பம்

  கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன்வீதியில் மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் ேமல்பகுதி எழுதாகி இருப்பதால் எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழும் அபாய நிலை நீடித்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.
  செந்தில்குமார், கிணத்துக்கடவு

பழுதடைந்த குடிநீர் தொட்டி

  கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், செட்டியக்காபாளையம் கிழக்கு பகுதியில் தரைமட்ட தொட்டி ஒன்று உள்ளது. இதில் நீண்ட நாட்களாக தண்ணீர் விடாததால் பழுதடைந்த காணப்படுகிறது. மேலும் மேல் பாகங்கள் பெயர்ந்து சிமெண்ட் கற்கள் உள்ளே விழுந்து கிடைக்கிறது. இதில் கம்பிகள் மட்டும் வெளியே நீட்டி உள்ளது. மாலை நேரத்தில் ஒருசில குழந்தைகள் அந்த இடத்தில் விளையாடி வருகின்றனர். எதுவும் அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் அந்த தரைமட்ட தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.
  பூபதி, செட்டியக்காபாளையம்.

குண்டும் குழியுமான சாலை

  கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  குமார், கணபதி.


Next Story