இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணபதி
கோவை கணபதி விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் தனலட்சுமி (வயது23).இவர் அதே பகுதியில் உள்ள தனியார் லேப் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் தனலட்சுமி கடந்த சில வருடங்களாகவே ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு தனலட்சுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தாங்கள் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் தனலட்சுமிக்கு தீவிர மாப்பிள்ளை தேடல் நடந்தது. இது பற்றி அறிந்த தனலட்சுமி பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும் அவர்களுடன் பேசாமலே இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் விரக்தியில் தனலட்சுமி தன்பெற்றோர் புதியதாக கட்டி வரும் வீட்டின் சமையலறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டிபோலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story