வால்பாறையில் பூத்து குலுங்கும் ஜக்கரண்டா மலர்கள்

வால்பாறையில் ஜக்கரண்டா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. அந்த மலர்களின் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து உற்சாகம் அடைந்தனர்.
வால்பாறை
வால்பாறை பகுதியில் பல்வேறு காலசூழ்நிலைகளை உணர்த்தும் வகையில் பல தரப்பட்ட பூக்கள் பூக்கும். குறிப்பாக பனிக்காலத்தில் மஞ்சள் நிறத்தில் கார்த்திகை மலர்களும், வெள்ளை நிறத்தில் டிசம்பர் பூக்களும் பூக்கும்.
அந்த வகையில் தற்போது வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கும் கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த கோடை காலத்தில் பூக்கும் ஊதா நிற ஜக்கரண்டா மலர்கள் தற்போது வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதை சாலையின் ஒரத்திலும், பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் பூத்து குலுங்குகிறது. இந்த பூக்கள் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. மேலும் அந்த பூக்களை அவர்கள் செல்போனில் புகைப்படம் எடுப்பதுடன், உற்சாகத்துடன் செல்பியும் எடுத்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story






