திருச்செங்கோட்டில் வேலைவாய்ப்பு முகாம்: 1,100 பேருக்கு பணி நியமன ஆணை-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்


திருச்செங்கோட்டில் வேலைவாய்ப்பு முகாம்: 1,100 பேருக்கு பணி நியமன ஆணை-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்
x
தினத்தந்தி 21 March 2022 10:44 PM IST (Updated: 21 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 1,100 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

எலச்சிப்பாளையம்:
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியவை சார்பில் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 3 ஆயிரத்து 474 பேர் முகாமில் கலந்து கொண்டனர். அதில் 1,100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். இதில் சின்ராஜ் எம்.பி., மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, மேற்கு மாவட்ட கொ.ம.தே.க. செயலாளர் நதி ராஜவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story