சென்னையில் குப்பை சேகரிக்க வரும் வாகனங்கள் மற்றும் அதன் நேரம் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியீடு


சென்னையில் குப்பை சேகரிக்க வரும் வாகனங்கள் மற்றும் அதன் நேரம் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியீடு
x
தினத்தந்தி 22 March 2022 2:19 PM IST (Updated: 22 March 2022 2:19 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் தெருக்களில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் அதன் நேரம் குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5,100 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக 358 வாகனங்கள் மற்றும் 3,725 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய 5 மண்டலங்களில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் தெருக்களுக்கு வரும் நேரம், வாகனத்தின் எண் மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் தெருக்களின் பெயர்கள் அடங்கிய விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் தெருக்களில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வரும் நேரம் மற்றும் அதன் விவரங்களை மாநகராட்சியின்
https://chennaicorporation.gov.in/gcc/bov_route/
என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story