சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 March 2022 2:55 PM IST (Updated: 22 March 2022 2:55 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் திட்டத்தில் கார் பார்க்கிங் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் முன்பகுதியில 3.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.250 கோடி திட்டத்தில் 6 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கார் பார்க்கிங் வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில் திறப்புக்கு தயாராகி வருகிறது.

இந்த 6 தளங்கள் கொண்ட வளாகத்தில் 2,100 கார்கள் வரை நிறுத்த முடியும். இந்த அடுக்குமாடி கார் பார்க்கிங் பகுதியில் இருந்து விமான நிலையத்திற்கு நடந்து செல்லும் வகையில், இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் மீது தற்போது மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வளாகத்திற்குள் வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. விமான நிலையத்திற்கும், வணிக வளாகத்திற்கும் இடையேயான இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் 2021-ல் முடிந்தன. பயணிகள் நடந்து செல்வதற்கு வசதியாக, இந்த மேம்பாலத்தின் மீது நீள்வட்ட வடிவில், மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் அடுக்கு மாடி கார் பார்க்கிங் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story