அழகு நிலைய பெண் உரிமையாளருக்கு கத்திக்குத்து


அழகு நிலைய பெண் உரிமையாளருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 22 March 2022 3:56 PM IST (Updated: 22 March 2022 3:56 PM IST)
t-max-icont-min-icon

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென மனைவியை குத்தியுள்ளார்.

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் மதார் (வயது 48). இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சர்பினிஷா (45). அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்த மதார், அரக்கோணத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அயனாவரம் வந்த மதார், சர்பினிஷாவை குடும்பம் நடத்த தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென மனைவி சர்பினிஷாவை குத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவரது அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவரையும் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து, காயமடைந்த சர்பினிஷா, மணிகண்டன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீசார் மதாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story