வால்பாறையில் உலக தண்ணீர் தினம் கொண்டாட்டம்
வால்பாறையில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
வால்பாறை
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக தண்ணீர் தினம் வால்பாறையில் கொண்டாடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அட்டகட்டி வனமேலாண்மை பயிற்சி மையத்தின் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமை தாங்கினார். மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ -மாணவிகளை வனத்துறையினர் சிங்கோனா வனத்துறையின் சோதனை சாவடி பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கான குடிதண்ணீர் தடுப்பு அணை பகுதிக்கு அழைத்துச் சென்று உலக தண்ணீர் தின விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முடிவில் வனச்சரகர் மணிகண்டன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story