இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் புகுந்த சாரைப்பாம்பு
கிணத்துக்கடவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள பொன்மலை நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47). இவர் கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொன்மலை வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துமிடத்தை (ஸ்டாண்டு) குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த வாகன நிறுத்தும் பகுதியில் தினசரி ஏராளமான வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை இந்த வாகனம் நிறுத்த பகுதிக்குள் சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்ததோடு, இருசக்கரங்களுக்கிடையே பதுங்கி கிடந்தது. இதனை அங்கு வாகனத்தை நிறுத்த வந்த வாடிக்கையாளர் ஒருவர் பார்த்ததோடு உரிமையாளரிடம் கூறினார். இதனையடுத்து அந்த இடத்தில் பதுங்கி இருந்த பாம்பை பார்க்க ஏராளமான கூட்டம் கூடியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பாம்பை பிடிக்க கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டி சேர்ந்த சுமன் என்ற வாலிபருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்குவந்த சுமன் சாதுர்யமாக செயல்பட்டு லாவகமாக சாரை பாம்பை பிடித்து தூக்கினார். பிடிபட்டது 7 அடி கொண்ட சாரைப்பாம்பு ஆகும். இதையடுத்து சாரைப்பாம்பை சாக்குப்பையில் போட்டு வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story