வால்பாறையில் ஆணையாளரின் அனுமதியின்றி சீல் வைத்த கடைகளை திறந்த வருவாய் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்


வால்பாறையில் ஆணையாளரின் அனுமதியின்றி சீல் வைத்த கடைகளை திறந்த வருவாய் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 22 March 2022 7:12 PM IST (Updated: 22 March 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் ஆணையாளரின் அனுமதியின்றி சீல் வைத்த கடைகளை திறந்த வருவாய் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வால்பாறை

வால்பாறையில் ஆணையாளரின் அனுமதியின்றி சீல் வைத்த கடைகளை திறந்த வருவாய் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

16 கடைகளுக்கு சீல்

வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி கடைகளில் கடைவாடகை செலுத்தாத கடைக்கார்களுக்கு பலமுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் கடைக்கார்கள் கடை வாடகை செலுத்தவில்லை. இதனால் நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுரையின் பேரில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் கடந்த 19-ந்தேதி வாடகை செலுத்தாத 16 கடைகளுக்கு சீல் வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்கார்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வியாபார சங்கங்களை சேர்ந்தவர்கள் நகராட்சி ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 50 சதவீத வாடகையை உடனே செலுத்துவது என்றும் மீதி 50 சதவீத வாடகையை 22-ந் தேதி செலுத்துவது என்று உத்தரவாத கடிதம் கொடுத்தால் சீல் வைத்த கடைகளை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பணியிடை நீக்கம்

அவ்வாறு செய்யும் கடைக்காரர்களின் கடைகளை ஆணையாளரின் அனுமதி பெற்று திறப்பது என்று நகராட்சி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வருவாய் உதவி ஆய்வாளர் பரதனுக்கு நேரடியாக உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் 3 கடைக்கார்கள் மட்டுமே கடைவாடகை கட்டியுள்ள நிலையில் 16 கடைகளையும் 19-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பரதன் திறந்து விடப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கடைகள் மீண்டும் சீல் வைக்கப்பட்டது.வால்பாறை நகராட்சி ஆணையாளரின் அனுமதியில்லாமல் சீல் வைத்த கடைகளை திறந்து விட்ட நகராட்சி வருவாய் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆணையாளர் சுரேஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். 

வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது

இந்த உத்தரவை பெற வருவாய் உதவியாளர் பரதன் வராததால் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் நகராட்சி குடியிருப்பில் உள்ள பரதன் வீட்டுக்கு சென்றனர். வீட்டிலும் பரதன் இல்லாததால் பணியிடை நீக்க உத்தரவை கதவில் ஒட்டினார்கள். அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்ததாவது:- ஆணையாளரின் உத்தரவினை மீறி செயல்பட்டு நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக குறிப்பாணை வழங்கப்பட்டதாகவும், அதற்கு பரதன் 3 கடைகளை மட்டுமே திறந்து விட்டதாகவும், தவறு ஏதும் செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளார். 
ஆனால் அது பொய்யான தவறான விளக்கம் என்று கூறி 13 கடைகளுக்கு கடைவாடகை செலுத்தாத நிலையில் ஆணையாளரின் உத்தரவை மீறி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கடைகளை திறந்து விடப்பட்டது கண்டறியப்பட்டது. ஆணையாளரின் உத்தரவினை மீறி நகராட்சிக்கு குந்தகமும் அவப்பெயரும் ஏற்படுத்தி கடைவாடகை வசூல் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி நகராட்சி ஒழுங்கு விதிகளின்படி வருவாய் உதவியாளர் பரதன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. 

Next Story