தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
பழுதான நுழைவு வாயில்
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் 2 முக்கிய நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள சிறிய நுழைவு வாயிலின் இரும்பு கம்பிகளால் ஆன கேட் பழுதடைந்து கம்பிகள் வளைந்து காணப்படுகின்றன. இதனால் இரவு நேரத்தில் நுழைவு வாயிலை பூட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இரவில் அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கவும், காட்டுப் பன்றிகள் உள்ளே நுழையவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த கேட்டை சரிசெய்ய வேண்டும்
குணசேகரன், கோத்தகிரி.
போக்குவரத்து நெரிசல்
கோவை கணபதி சத்திரோடு பாரதிநகர் பிரிவில் எப்.சி.ஐ குடோன் ரோடு உள்ளது. இங்கு காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும்.
சங்கர், கணபதி.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
கோவை கண்ணப்பநகரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பழனிசாமி, மணியகாரன்பாளயைம்.
பாதாள சாக்கடையில் அடைப்பு
கோவை பாலசுந்தரம் சாலையில் போலீஸ் பயிற்சி பள்ளி அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக சென்று வருகிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அதில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
ரவி, கோவை.
சாலையில் உலாவும் கால்நடைகள்
பொள்ளாச்சி-உடுமலை சாலையில் மின்வாரிய அலுவலகம், மின்மயானம் உள்ளது. இந்த பகுதியில் கால்நடைகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் உலா வரும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்பிரமணியன், பொள்ளாச்சி.
குண்டும் குழியுமான சாலை
கிணத்துக்கடவு ஒன்றியம் தேவணாம்பாளையத்தில் இருந்து வகுத்தம் பாளையத்துக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், தேவணாம்பாளையம்.
செயல்படாத சிக்னல்
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் முருகன் மில் உள்ளது. இந்த மில் அருகே இருக்கும் சிக்னல் செயல்படுவது இல்லை. இதனால் இந்த சிக்னலில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் எந்த நேரத்திலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சிக்னலை சீரமைக்க வேண்டும். அல்லது அங்கு போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டும்.
கணேசன், கோவை.
பஸ்நிறுத்தத்துக்கு வராத பஸ்கள்
கோவை காந்திபுரத்தில் இருந்து கோவைப்புதூருக்கு 3 எச்., 3 என் ஆகிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ் கோவைப்புதூருக்கு வந்துவிட்டு அறிவொளி நகர், அண்ணாநகரில் இருந்து புறப்படும்போது மீண்டும் கோவைப்புதூர் வருவது இல்லை. மாறாக அய்யப்பன் கோவில், போலீஸ் குடியிருப்பு, குளத்துப்பாளையம் வழியாக காந்திபுரத்துக்கு செல்கிறது. இதனால் கோவைப்புதூர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பஸ்கள் பஸ்நிறுத்தத்துக்கு வர அனுமதிக்க வேண்டும்.
சுரேஷ், கோவைப்புதூர்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் பள்ளி அருகே அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மாணவிகள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
மணிகண்டன், கோவை.
Related Tags :
Next Story






