தாய்-மகளை அடித்து உதைத்து கொலை மிரட்டல்


தாய்-மகளை அடித்து உதைத்து கொலை மிரட்டல்
x
தாய்-மகளை அடித்து உதைத்து கொலை மிரட்டல்

தாய்-மகளை அடித்து உதைத்து கொலை மிரட்டல்

எட்டிமடை



கோவையை அடுத்த எட்டிமடை பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது42). இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் ஆகும். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரைப் பிரிந்த ராஜேஸ்வரி 2-வது ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 

அவரும் சில வருடங்களில் இறந்து விட்டார். இந்த நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த சக்கரவர்த்தி (42) என்பவரோடு ராஜேஸ்வரி நட்பாக பழகினார். இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 
-
இந்த நிலையில் சக்கரவர்த்தி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். ராஜேஸ்வரிக்கு 10 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

 இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இவர்கள் 3 பேரும் கோவையில் உள்ள எட்டிமடை பகுதிக்கு குடி பெயர்ந்தனர். இங்கு சக்கரவர்த்தி கூலி வேலை செய்து வந்துள்ளார். அதில் கிடைத்த வருமானத்தில் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு சென்ற சக்கரவர்த்தி ராஜேஸ்வரியோடு சண்டை போட்டதாக தெரிகிறது.
 இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக இவர்கள் 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. சம்பவ தினமான நேற்று முன்தினம் வழக்கம்போல் சக்கரவர்த்தி குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். 

இதனை தட்டிக்கேட்ட ராஜேஸ்வரி, இனிமேல் உன்னோடு நான் வாழ மாட்டேன் என தனது மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்ப முயற்சி செய்தார்.
 இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி ராஜேஸ்வரியை அடித்து அவரது சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது. இதனை ராஜேஸ்வரியின் மகள் குறுக்கே சென்று தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி அந்த சிறுமியை பிடித்து அவளது கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, "நீ பெற்ற பிள்ளையாக இருந்தால் இப்படி அடிப்பியா?" என கோபமாக கேட்டுள்ளார். 

இதனால் மேலும் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி ராஜேஸ்வரியையும், மகளையும்  அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்து விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் அச்சமடைந்த தாயும் மகளும் இதுகுறித்து க.க. சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்கரவர்த்தியை கைது செய்து பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர்.

Next Story