காலாவதியான உணவு பொருட்களை விற்ற 41 கடைகளுக்கு நோட்டீஸ்


காலாவதியான உணவு பொருட்களை விற்ற 41 கடைகளுக்கு நோட்டீஸ்
x
காலாவதியான உணவு பொருட்களை விற்ற 41 கடைகளுக்கு நோட்டீஸ்
தினத்தந்தி 22 March 2022 9:53 PM IST (Updated: 22 March 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

காலாவதியான உணவு பொருட்களை விற்ற 41 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவை

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சில கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 7 குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இதன்படி கோவை ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, விளாங்குறிச்சி சாலை, மசக்காளிபாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், குனியமுத்தூர், துடியலூர், சரவணம்பட்டி, சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய இடங்களில் வணிக வளாகங்கள், மசாலா தயாரிக்கும் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

 இதில் 69 கடைகளில் இருந்து 423 கிலோ காலாவதியான உணவு பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 41 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 உட்பிரிவு 55, 63-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த 15 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story