காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோவில் திருவிழா; பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்


காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோவில் திருவிழா; பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 22 March 2022 9:57 PM IST (Updated: 22 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

உத்தமபாளையம்:
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் பிரசித்திபெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந்ேததி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால்குட ஊர்வலம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 
அப்போது ஏராளமான பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில் சில பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கினர். சிலர் 25 அடி நீளமுள்ள அலகு குத்தி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 
இந்த திருவிழாவில் கம்பம், சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருவிழாவையொட்டி காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி சார்பில் தலைவர் வேல்முருகன் தலைமையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இதில், செயல் அலுவலர் மல்லிகா, துணைத்தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Next Story