தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும்
தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும்
கோவையில் இருந்து உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல்ரெயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுற்றுலா தலங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் உடுமலையும் ஒன்றாகும். இந்த பகுதியில் திருமூர்த்தி மலை, திருமூர்த்தி அணை, அமராவதி அணை, முதலைப்பண்ணை ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன.இந்த சுற்றுலா தலங்களுக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சாலைமார்க்கமாக வந்து செல்கின்றனர். கேரளாவில் உள்ள சிறந்த சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்வதற்கு வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் உடுமலைக்கு வந்து, மறையூர்வழியாக சென்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம்உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்கள்மற்றும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊரான தென்மாவட்டங்களுக்கு சென்று வருவதற்கு ரெயில்பயணம் வசதியாக இருக்கும். உடுமலை வழியாக முன்பு மீட்டர் கேஜ் ரெயில்பாதை இருந்தது. அப்போது கோவைராமேஸ்வரம், பாலக்காடுராமேஸ்வரம், கோவைதூத்துக்குடி, கோவைமதுரை ஆகிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது.அத்துடன் கோவைசெங்கோட்டை, பாலக்காடுதிண்டுக்கல் இடையே சிலகாலம் ரெயில்கள் இயக்கப்பட்டது.
கோவை திண்டுக்கல்
கோவைதிண்டுக்கல் இடையே இயக்கப்பட்டு வந்த ரெயில், வேலைக்கு சென்று வந்தவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்துவந்தது.அந்த ரெயில் திண்டுக்கல்லில் இருந்து காலை4.30 மணிக்கு புறப்பட்டு உடுமலைக்கு காலை6.45க்கு வந்து, இங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக கோவைக்கு காலை8.30மணிக்கு சென்று சேர்ந்து வந்தது.கோவையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு உடுமலைக்கு வந்து, இங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு இரவு 10.30மணிக்கு சென்று சேர்ந்து வந்தது.இந்த ரெயில் கோவைக்கு வேலைக்கு சென்று வருகிறவர்களுக்கு வசதியாக இருந்ததால், அவர்கள் சீசன் டிக்கெட் எடுத்து சென்று வந்தனர்.
அகல ரெயில்பாதை
இந்த நிலையில் பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே இருந்த மீட்டர் கேஜ் ரெயில்பாதை கடந்த2009-ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன.இந்த பணிகள் நடந்துவந்ததால் இந்த வழித்தடத்தில் 5ஆண்டுகளாக ரெயில்கள் இல்லை.அகல ரெயில்பாதை பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து உடுமலை வழியாக 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில், திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் வழியாக மதுரை வரை செல்லும்அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காட்டில் இருந்து திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ்ரெயில், கோவையிலிருந்து மதுரைக்கு செல்லும் ரெயில் ஆகிய 4 ரெயில்கள் மட்டுமே உடுமலை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று மறுமார்க்கத்திலும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அகலரெயில்பாதையாக மாற்றப்பட்டபிறகு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படவில்லை.
கூடுதல் ரெயில்கள்
இந்த நிலையில் தற்போது பாலக்காடு-திண்டுக்கல் இடையேஉள்ள ரெயில்பாதையை மின்மயமாக்குதல் பணிகள் நடந்துள்ளது. இந்த நிலையில்உடுமலை வழியாக தற்போது இயக்கப்பட்டு வரும் ரெயில்களுடன் கூடுதலாக கோவையில் இருந்து உடுமலை வழியாக நாகர்கோவில், செங்கோட்டை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு ரெயில்களை இயக்கவேண்டும் என்று உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அத்துடன் உடுமலை ரெயில் நிலையத்தில்பயணிகள் ரெயிலுக்காக காத்திருக்கும் பகுதியில் ரெயில் நிலைய அலுவலகம் முன்பு பிளாட்பாரம் பகுதியில் சிறிதளவு இடத்தில் மட்டுமே மேற்கூரை உள்ளது. பிளாட்பாரம் நீளமாக இருந்தும்அங்கு நீண்ட தூரத்திற்கு மேற்கூரை இல்லை. மழைகாலத்தில், ரெயில் வரும் வரை பயணிகள், சிறிய அளவில் உள்ள மேற்கூரைக்கு கீழேயே இடநெருக்கடியுடன் காத்திருக்க வேண்டியுள்ளது.ரெயில் வந்ததும், ரெயிலில் இடம்பிடிப்பதற்காக மழையில் நனைந்து கொண்டே ஓடும் சூழ்நிலை உள்ளது.வெயில் காலத்தில், வெயிலில் காத்திருக்கின்றனர்.அதனால் பிளாட்பாரம் உள்ளபகுதியில் கூடுதலாக மேற்கூரை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story