போக்குவரத்து இடையூறு
போக்குவரத்து இடையூறு
போக்குவரத்து இடையூறு
சாலையை ஆக்கிரமிப்பதில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல. அரசு புறம்போக்கு நிலம் சிறிய பரப்பளவில் இருந்தால் கூட அதை ஆக்கிரமிக்கவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள். இதனால் சாலைகள் குறுகி பொதுமக்களாகிய வாகன ஓட்டிகள்தான் சிரமப்படுகிறார்கள்.
சிறுபூலுவபட்டியில் உள்ள திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக சாலையின் இருபுறமும் ஏராளமான பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்
திருப்பூர் தண்ணீர் பந்தல் காலனியில் இருந்து 15 வேலம்பாளையம் செல்லும் 4 முனை சந்திப்பு என்பதால் காலை 8 மணி முதல் 10 மணி வரை கடுமையான போக்குவரத்து சிக்கல், சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் முன் காலையில் குறிப்பிட்ட அந்த 2 மணி நேரமாது மட்டும் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்னர்.
சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்
அவினாசி பழங்கரை இருந்து தேவம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரம் கோழி கழிவுகளை கொட்டிவிடுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக வேலைக்கு செல்வோரும், கல்லூரி மற்றும் பள்ளிசெல்லும், குழந்தைகளும் அவதிப்படுகிறார்கள். எனவே கோழி கழிவுகள் குப்பைகள் பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பற்ற மின்மோட்டார் அறை
ஊத்துக்குளி அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள மின் மோட்டார் அறையின் கதவு உடைந்து திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக மதுபோதையில் செல்பவர்கள் மின்மோட்டாரை இயக்கும் ஆபத்து உள்ளது. அது மட்டுமல்ல இப்படி திறந்து கிடப்பதால் பொருட்களை திருடி செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அறைக்கு உரிய முறையில் கதவு போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குடிநீர் வருமா
திருப்பூர் மிலிட்டரி காலனியில் உள்ள குழாயில் தண்ணீர் வந்து பல மாதங்கள் ஆகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும்
--
Related Tags :
Next Story